ரஞ்சி டிராபி காலிறுதி: முதல் இன்னிங்சில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ், 2-வது இன்னிங்சில் 70 ரன் விளாசல்
- முதல் இன்னிங்சில் 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
- 2-வது இன்னிங்சில் 76 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 3-வது காலிறுதி போட்டியில் மும்பை- ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
மும்பை அணியில் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முலானி 91 ரன்களும், தனுஷ் கோட்டியான் 97 ரன்களும் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் முதல் இன்னிங்சில் 315 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரகானே 31 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஹரியானா 301 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான அங்கித் குமார் சிறப்பாக விளையாடி 136 ரன்கள் விளாசினார். இவரது சதத்தால் ஹரியானா 300 ரன்களை தாண்டியது.
பின்னர் 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான விளையாடினார். அவர் 86 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரகனுனே 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல உள்ள மும்பை 4 விக்கெட் இழப்பிற்க 238 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் ரன்கள் குவிக்க திணறி வருகிறார். அவர் ஃபார்ம் அவுட்டில் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் 70 ரன்கள் விளாசியது அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும்.