கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் அயர்லாந்து 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2025-02-10 14:36 IST   |   Update On 2025-02-10 14:36:00 IST
  • முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260 ரன்களும், 2-வது இன்னிங்சில் 298 ரன்களும் சேர்த்தது.
  • முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 6-ந்தேதி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஆண்டி மெக்பிரைன் 90 ரன்களும், மார்க் அடைர் 78 ரன்களும சேர்த்தனர். ஒரு கட்டத்தில் அயர்லாந்து 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி 7-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் நிக் வெல்ச் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். முசாரபானி 47 ரன்கள் எடுத்தார்.

7 ரன்கள் முன்னிலையுடன் அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆண்டி பால்பிரைன் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 58 ரன்களும் அடிக்க அயர்லாந்து 298 ரன்கள் குவித்தது.

இதனால் ஜிப்பாப்வே அணிக்கு 292 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்லி மாதவேரே 61 ரன்களுடனும், நியாம்குரி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 3 விக்கெட், 109 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜிம்பாப்வே களம் இறங்கியது. வெஸ்லி மாதவேரே 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் அயர்லாந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 90 ரன்கள் அடித்த ஆண்டி மெக்பிரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Tags:    

Similar News