ரிக்கல்டன், கைல் வெர்ரைன் சதம்: தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்களில் ஆல் அவுட்
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்தது.
- இலங்கையின் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நாடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன் சிறப்பாக ஆடி சதமடித்தனர். அரை சதமடித்த பவுமா 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 3, விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 89 ரன்னில் வெளியேறினார்.