டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம்: ஒரு பந்தில் தவறவிட்ட அபிஷேக் சர்மா
- எஸ்டோனியா வீரர் 27 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
- அபிஷேக் சர்மா 28 பந்தில் சதம் விளாசி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா. இவர் டி20 கிரிக்கெட்டில் அணியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருறார். இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் பஞ்சாப்- மேகாலயா அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மேகாலயா 20 ஓவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார். இதனால் அவர் 28 பந்தில் சதம் விளாசினார். 29 பந்தில் 8 பவுண்டரி, 11 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க பஞ்சாப் அணி 9.3 ஓவரிலேயே 144 ரன்கள் எடுதது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
28 பந்தில் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக எஸ்டோனியா வீரர் சஹில் சவுகான் சைப்ரஸ் அணிக்கெதிராக 27 பந்தில் சதம் அடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்திருந்தார். தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனை ஒரு பந்தில் மிஸ் செய்தாலும் 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதே தொடரில் உர்வில் பட்டேலும் 27 பந்தில் சதம் விளாசியுள்ளார். இவருவரும் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.