டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் ஓவரில் 0 ரன்னில் ஆட்டமிழந்த முதல் அணி
- 5-வது லீக் ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின
- இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.
மலேசியா, ஹாங் காங், பஹ்ரைன் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஹ்ரைன் 129 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 1 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
1 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங், 3-வது பந்தில் 1 ரன் அடித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 0 ரன்னில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை பஹ்ரைன் அணி படைத்துள்ளது.