விளையாட்டு

ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் 'லீக்' சவுதி அரேபியா திட்டம்

Published On 2025-03-16 12:35 IST   |   Update On 2025-03-16 12:35:00 IST
  • உலகளாவிய இந்த கிரிக்கெட் ‘லீக்’ போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
  • ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் 'லீக்' சவுதி அரேபியா திட்டம்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் லீக் தொடர் நடத்தப்படுகிறது.

ஐ.பி.எல். போலவே ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டியும் புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்க லீக் உள்ளிட்ட பல போட்டிகளும் பிரபலம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் உலகளாவிய கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாடு ரூ.4347 கோடியை முதலீடு செய்ய தயாராக உள்ளது. கால்பந்து, பார்முலா 1 கார் பந்தயத்தில் சவுதி அரேபியா முதலீடு செய்து இருந்தது. தற்போது பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் லீக் போட்டியையும் நடத்த முடிவு செய்து உள்ளது.

உலகளாவிய இந்த கிரிக்கெட் 'லீக்' போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. டென்னிஸ் கிராண்ட்சிலாம் போன்று இதை நடத்த திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியா உள்ள எஸ்.ஆர்.ஜே நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தொடர்ந்து பேசி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொழில் முறை லீக்குகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேனி டவுன்செனட் தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News