null
பதட்டம் அடைய வேண்டாம்.. ஓய்வு குறித்த சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்
- அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம்.
- முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன்.
இந்திய டெஸ்ட் அணி ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்தது.
விராட் கோலி நிச்சயமாக அந்த தொடரில் பங்கேற்பார் எனவும், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் கோலி நிச்சயமாக ஆடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இன்னொரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நான் பங்கேற்காமல் போகலாம் என்று விராட் கோலி தனது ஓய்வு பற்றி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பதட்டம் அடைய வேண்டாம். நான் ஒன்றும் ஓய்வு அறிவிக்கப் போவதில்லை. இப்போதைக்கு எல்லாம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம். எனவே முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் என்ன செய்வேன் என எனக்கே தெரியவில்லை. சக வீரர் ஒருவரிடம் இதே கேள்வியை கேட்டேன் அவரும் இதே பதிலைத்தான் கொடுத்தார். ஒருவேளை அதிக அளவில் பயணம் செய்வேன்.
இவ்வாறு கோலி கூறினார்.