மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி: டெல்லிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
- ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.
இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.