பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி
- ஜிம்பாப்வே அணிக்கு கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.
- 19-வது ஓவரில் 9 ரன்களும், கடைசி ஓவரில் 12 ரன்களும் அடித்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணி முதல் 9.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் விளாசியது. இதனால் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 18 ஓவர் முடிவில் 112 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி 2 ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஜிம்பாப்வே முதல் 3 பந்தில் நான்கு ரன்கள் சேர்த்தது. 5-வது பந்தை மசகட்சா பவுண்டரிக்கு விரட்டினார். என்றாலும் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் கிடைத்தது. இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அறிமுக வீரரான மபோசா முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். இதனால் கடைசி 4 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.
3-வது பந்தில் ஒரு ரன் அடிக்க, 4-வது பந்தில் விக்கெட்டை இழந்தது. 5-வது பந்தில் ஒரு ரன் அடிக்க ஜிம்பாப்வே 19.5 ஓவரில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது,