விளையாட்டு

90ஸ் கிட்ஸ் ஃபேவரெட்.. பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்

Published On 2024-12-21 06:27 GMT   |   Update On 2024-12-21 06:27 GMT
  • மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ரே மிஸ்டீரியோ.
  • ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.

டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ரே மிஸ்டீரியோ (66).

இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும்.

இந்நிலையில், ரே மிஸ்டீரியோ நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும், ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.

ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News