பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ்: இந்தியாவின் அனாகத் சாம்பியன்
- பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காவில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் அனாகத் சிங்குடன் எகிப்து நாட்டை சேர்ந்த மலிகா எல் கராக்ஸி மோதினார்.
17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக டெல்லியை சேர்ந்த அனாகத் சிங் பங்கேற்றார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அனாகத் ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அனாகத் சிங்குடன் எகிப்து நாட்டை சேர்ந்த மலிகா எல் கராக்ஸி மோதினார்.
முதல் செட்டை அனாகத் 4-11 என்ற கணக்கில் இழந்தார். அடுத்த செட்டை 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-11 என்ற மீண்டும் இழந்தார். இதனையடுத்து நம்பிக்கையுடன் களமிறங்கிய அனாகத் 4-வது மற்றும் 5-வது செட்டை 11-5, 11-3 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
இதன்மூலம் 4-11, 11-9, 6-11, 11,5, 11-3 என்ற செட் கணக்கில் மலிகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை அனாகத் வென்றார். 16 வயதான் அனாகத் இதற்கு முன்பு U-11 மற்றும் U-15 ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு U-17 போட்டியின் இறுதிபோட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.