விளையாட்டு
கிங் கோப்பை பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்சயா சென் தோல்வி
- சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், சீன வீரரான ஹூ ஜே ஆன் உடன் மோதினார்.
இதில் சென் 19-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேரினார்.