கிரிக்கெட் (Cricket)
பிசிசிஐ செயலாளராகிறார் தேவஜித் சைகியா: பிரப்தேஜ் பாட்டியா பொருளாளராக வாய்ப்பு
- தேவஜித் சைகியா இடைக்கால செயலாளராக இருந்து வருகிறார்.
- செயலாளர் பதவிக்கு இவரை தவிர மற்ற யாரும் விண்ணப்பம் செய்யவில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்தவர் ஜெய் ஷா. இவர் ஐசிசி தலைவராக தேர்வானதால் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் தேவஜித் சகியா இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல் பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலார் மகாராஷ்டிரா மாநில மந்திரியாகிவிட்டார்.
இதனால் இந்த இரண்டு பதவிகளும் காலியாக இருந்தன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று மாலை 4 மணி வரை விண்ணப்பிக்க முடியும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தேவஜித் சைகியா செயலாளர் பதவிக்கும், பிரப்தேஜ் பாட்டியா பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பித்திருந்தனர். மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் தேவஜித் சைகியா பொருளாளராகவும், பிரப்தேஜ் பாடியா பொருளாளராகவும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.