விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா- காயத்ரி ஜோடி வெற்றி
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றனர்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.12½ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்டின் முதல் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடியும் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பார்ன்- சுகித்தா சுவாச்சாய் ஜோடியும் மோதின. இதில் 21-10, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.