விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் வெற்றி

Published On 2025-03-18 15:42 IST   |   Update On 2025-03-18 15:42:00 IST
  • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
  • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

பாசெல்:

மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத் தொகைக்கான சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய வீரர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார். இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News