பயிற்சியின் போது "சா பூ த்ரீ" விளையாடிய ஹர்திக் பாண்டியா - சூர்யகுமார் - திலக் வர்மா
- முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- மும்பை அணி முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் பயிற்சியை துவங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மைதானத்தில் ஷா பூ த்ரீ விளையாடினர்.
பயிற்சின் போது மூவரும் ஒன்றுகூடிய நிலையில், தீவிரமாக ஆலோசனை செய்து பிறகு சா பூ த்ரீ விளையாடினர். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளின் போது யார் முதலில் தொடங்குவது என்பதை முடிவு செய்ய சா பூ த்ரீ போடுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி வீரர்களும் இதை விளையாடியது கவனம் பெற்றுள்ளது.
பலரும் இந்த வீடியோவில் கமென்ட் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.