டென்னிஸ்
ரோட்டர்டாம் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் டி மினார்
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலி வீரர் மேட்டி பெல்லூசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.