டென்னிஸ்
மும்பை ஓபன் டென்னிஸ்: தமிழ்நாடு வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் அரை இறுதியில் தோல்வி
- எல் & டி மும்பை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.
- 15 வயதான மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
எல் & டி மும்பை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்த டென்னிஸ் தொடரில் கோவையை சேர்ந்த தமிழ்நாட்டு வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில், 15 வயதான மாயா ராஜேஸ்வரன் ரேவதி அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை மெய் யமகுச்சியை எதிர்கொண்டார். இப்போட்டியில் 3-6 , 1-6 செட்கணக்கில் மாயா ராஜேஸ்வரன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.