டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஆண்ட்ரிவா, கசட்கினா

Published On 2024-10-19 22:09 IST   |   Update On 2024-10-19 22:09:00 IST
  • நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
  • இதில் செக் வீராங்கனை முச்சோவா போட்டியில் இருந்து விலகினார்.

பீஜிங்:

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் மீரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

இதில் முச்சோவா முதல் செட்டை 2-6 என இழந்தார். 2வது செட்டில் 0-1 என இருந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஆண்ட்ரிவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.

இதில் படோசா 4-6 என முதல் செட்டை இழந்த நிலையில் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, கசட்கினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனைகள் ஆண்ட்ரிவா, கசட்கினா மோதுகின்றனர்.

Tags:    

Similar News