டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2025-03-19 14:12 IST   |   Update On 2025-03-19 14:12:00 IST
  • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
  • இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வென்றார்.

புளோரிடா:

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவாமி ஒசாகா, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவா உடன் மோதினார்.

இதில் ஒசாகா 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News