விளையாட்டு
null

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஜோடி

Published On 2025-03-14 15:13 IST   |   Update On 2025-03-14 15:14:00 IST
  • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இந்திய அணி இழந்தது.
  • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த இரண்டு செட்டுகளை இந்திய ஜோடி கைப்பற்றி அசத்தியது.

பர்மிங்காம்:

பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆட்டத்தில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்- திரிஷா ஜாலி தென் கொரியா வீராங்கனையான கிம் ஹை-ஜியோங், காங் ஹீ-யோங் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் முதல் செட்டை இந்திய அணி இழந்தது. இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தியது. இதனால் 15-21, 21-18, 21-18 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Tags:    

Similar News