தமிழ்நாடு

180-வது ஆண்டு விழா: மின்னொளியில் ஜொலித்த சுலோச்சன முதலியார் பாலம்

Published On 2022-11-28 09:05 IST   |   Update On 2022-11-28 09:05:00 IST
  • பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்யப்பட்டது.
  • சிறப்பு விருந்தினராக சுலோச்சன முதலியாரின் 6-வது தலைமுறை (எள்ளு பேரன்) பக்தவச்சலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் 180-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்யப்பட்டது. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் சண்முகம் வக்கீல் திருமலையப்பன், கவிஞர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுலோச்சன முதலியாரின் 6-வது தலைமுறை (எள்ளு பேரன்) பக்தவச்சலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சுலோச்சன முதலியார் பாலத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

இதையொட்டி பாலம் முழுவதும் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று இரவு சுலோச்சன முதலியார் பாலம் மின்னொளியில் ஜொலித்தது.

Tags:    

Similar News