செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலைய முதல் யூனிட் மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2016-06-06 09:38 IST   |   Update On 2016-06-06 09:38:00 IST
தூத்துக்குடி அனல்மின் நிலைய முதல் முதல் யூனிட்டில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக முதல் யூனிட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய கூடிய 5 யூனிட்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 1050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அபரிமிதமான மின் உற்பத்தியால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் முதல் யூனிட் மின் உற்பத்தியை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி முதல் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தற்போது நான்கு யூனிட்டுகளில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. ஏற்கனவே தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல் மின்நிலையத்தில் முதல் யூனிட்டில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக முதல் யூனிட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பபட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் தற்போது 710 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News