ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை பாதிப்பு இல்லாமல் அமல்படுத்த வேண்டும்: சரத்குமார் பேட்டி
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் கேக் வெட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
தொடர்ந்து நீலாங்காரையில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடினார்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து இன்னும் ஆலோசனை நடத்தி பாதிப்பு இல்லாத அளவிற்கு அமல் படுத்த வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி மாநாடு சேலத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார், மாநில துணை பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர், மாநில பொருளாளர் சுந்தரேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் என்.ஆர்.பி. ஆதித்தன் உடன் இருந்தனர்.