தமிழ்நாடு
null
சாலமன் பாப்பையா மனைவி மறைவு - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
- வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
- முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையை சேர்ந்த தமிழ் அறிஞர் மற்றும் பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் அரசரடி பகுதியில் உள்ள ஞானஒளிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாய் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சாலமன் பாப்பையா மனைவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் துணைவியார் திருமதி. ஜெயபாய் அவர்கள் மறைந்த செய்தியறிதது மிகவும் வருத்துகிறேன்."
"உற்ற துணையான வாழ்விணைரை இழந்து தவிக்கும் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.