தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் ஓய்வு பெறும் வயதை அடைந்து விட்டார்- அண்ணாமலை

Published On 2025-01-12 21:35 IST   |   Update On 2025-01-12 21:35:00 IST
  • பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை
  • நான் பெரியார் பற்றி பேசுகிறேன். ஆனால் நான் ஒரு அம்மா அப்பாவுக்கு தான் பிறந்தேன்.

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், "பெரியார் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அண்ணாமலையிடம் துரைமுருகன் கருத்து தொடர்பாக செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், "நான் பெரியார் பற்றி பேசுகிறேன். ஆனால் நான் ஒரு அம்மா அப்பாவுக்கு தான் பிறந்தேன். அரசியலில் ஒரு வயது வந்தவுடன் ஓய்வளிக்க வேண்டும் என்பதற்கு கிளாசிக் உதாரணம் துரைமுருகன். அவர் ஓய்வு வயதை எட்டி விட்டார் என்று நினைக்கிறேன். சில தலைவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து விடலாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேடையிலேயே கூறினார் .

பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை .எப்போதோ கட்டமைத்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.

ஆளுநர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்; அவர் சொன்னது சரியே. ஆளுநர் அந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News