தமிழ்நாடு
பெரியார் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன் - அமைச்சர் துரைமுருகன்
- சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பிறகு தான் தேசிய கீதம் பாடப்படுவது மரபு.
- ஆளுநர் என்ற ஆணவத்தினால் மரபை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரைமுருகன், "சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பிறகு தான் தேசிய கீதம் பாடப்படுவது மரபு. ஆளுநர் என்ற ஆணவத்தினால் மரபை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், "பெரியார் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.