செய்திகள்

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை - நீர் மட்டம் 113 அடியாக உயர்வு

Published On 2017-08-19 11:12 IST   |   Update On 2017-08-19 11:12:00 IST
பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.
கூடலூர்:

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால் நீர் மட்டம் உயரவில்லை. எனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் வறட்சி நிலவியது எனவே கடந்த ஆண்டு ஒரு போக சாகுபடி மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் முதல் போக சாகுபடி நடைபெறவில்லை.

கடந்த ஒரு வாரமாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று விடிய விடிய நீர் பிடிப்பு பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலையும் மழை தூறிக் கொண்டே இருந்தது. எனவே அணையின் நீர் மட்டம் 113.10 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு 445 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் குடிநீருக்கு போக வைகை அணைக்கு வந்து சேர்கிறது. இதனால் வைகை அணை நீர் மட்டம் 29.43 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. மதுரை மாநகர் குடிநீருக்கு மட்டும் 40 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 32.40 அடியாக உள்ளது. அணைக்கு 40 கன அடி நீர் வருகிறது. தண்ணீர் திறந்து விடப்படவில்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 74.45 அடியாக உள்ளது. அணைக்கு 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மழை அளவு விபரம் மி.மீட்டரில் வருமாறு:-

பெரியாறு அணை 56.8, தேக்கடி 26, கூடலூர் 6, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 10.6, வீரபாண்டி 16, வைகை அணை 3.4, மஞ்சளாறு அணை 1, சோத்துப்பாறை அணை 3, கொடைக்கானல் 4.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News