செய்திகள்
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்: டி.டி.வி தினகரன் சார்பில் ஐகோர்ட்டில் மனு
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என டி.டி.வி தினகரன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்த பின்னர் அக்கட்சியில் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்து வெளியேறினர். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
இதனால், முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
மெஜாரிட்டிக்கு 4 எம்.எல்ஏ.க்கள் தேவைப் படுவதால் எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டசபையை கூட்டி பெரும்பாண்மையை நிரூபிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.