செய்திகள்

பாம்பன் பாலத்தில் விபத்து: சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

Published On 2017-10-29 10:28 IST   |   Update On 2017-10-29 10:28:00 IST
பாம்பன் பாலத்தை கடந்து சென்றபோது சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரத்திற்கு தினமும் ஏராளமானோர் ஆன்மீக சுற்றுலா வந்து செல்கின்றனர். திருப்பூரில் இருந்து ஒரு வேனில் 15 பேர் சுற்றுலா வந்தனர். இன்று காலை 6 மணியளவில் அந்த வேன் பாம்பன் பாலத்தை கடந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பாலத்தின் இறக்கத்தில் இருந்த வேகத்தடையில் இடித்த வேன் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த ரஞ்சித் (வயது 30), டிரைவர் ராஜ்குமார் (38), சகாதேவன் (45), மணிமேகலை (50), சந்திரமதி உள்பட 15 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர் மீனாகுமாரி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் டிரைவர் ராஜ்குமாருக்கு கால் முறிவும், ரஞ்சித்துக்கு கையில் பலத்த காயமும் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News