செய்திகள்

இசக்கிமுத்து குடும்பத்துடன் பலியானதற்கு கலெக்டர், எஸ்.பி. பொறுப்பேற்க வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்

Published On 2017-11-01 17:24 IST   |   Update On 2017-11-01 17:24:00 IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் இசக்கி முத்து பலியானதற்கு கலெக்டர், எஸ்.பி. பொறுப்பேற்க வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
நெல்லை:

முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த மணலை வெளியே கொண்டு செல்ல முடியாதபடி தமிழக அரசு தடை செய்துள்ளது.

உடனடியாக தடையை நீக்கி அனுமதி அளிக்க வேண்டும். சமையல் கியாஸ் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி பிரச்சனையில் பொதுமக்களிடம் பா.ஜ.க. செல்வாக்கு இழந்துள்ளது. அமித் ஷா, மோடிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரிகளே வரியை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதனை கைவிட வேண்டும்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி பிரச்சனையில் குடும்பத்துடன் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டுமே பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர மிகுந்த வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வி.பி. துரை உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News