செய்திகள்

தொடரும் வடகிழக்கு பருவமழை: சென்னையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2017-11-01 19:13 IST   |   Update On 2017-11-01 19:13:00 IST
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் மூன்றாவது நாளாக நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில், இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மூன்றாவது நாளாக நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News