செய்திகள்
ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நகரபாடி தெற்கு வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை- கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

Published On 2019-10-22 09:49 IST   |   Update On 2019-10-22 09:49:00 IST
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர்காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர்காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர், காவனூர், பாளையங்கோட்டை, சாவடிகுப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே மழை தூறிக் கொண்டு இருந்தது. இரவு 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது.

இதனால் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நகரபாடி தெற்கு வீதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நின்றது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி, பண்ருட்டி, மந்தாரகுப்பம், திட்டக்குடி, உள்பட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது.

Similar News