செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை அரசு ஆஸ்பத்திரி நர்சிங் மாணவி உள்பட 2 பேருக்கு கொரோனா

Published On 2020-06-08 12:13 IST   |   Update On 2020-06-08 12:13:00 IST
கோவை அரசு ஆஸ்பத்திரி நர்சிங் மாணவி உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.
கோவை:

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்ட் பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்க்கும் 27 வயது வாலிபருக்கு நேற்று கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டது.

இதே போல கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு டெல்லியில் இருந்து வந்த மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை வேனில் அழைத்து வந்த டிரைவருக்கு நேற்று கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து விமானம் மூலமாக வந்த 50 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி கோவை அரசு ஆஸ்பத்திரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 25-ந்தேதி தனது சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் கடந்த 5-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போத்தனூரை சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் மும்பையில் இருந்து ரெயில் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார். பின்னர் அங்கு இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். அவரது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவரும் உடனடியாக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது.

Similar News