செய்திகள்
லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொலை
லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடப்பட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பழ வியாபாரி முத்துப்பாண்டி (வயது32),கோவில்பட்டி பசுவந்தனை ரோடு ஓரத்தில் சிறிய கூடாரம் அமைத்து கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்தார். ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் இவர் கொய்யாப்பழ வியாபாரத்துக்கு செல்லவில்லை.
ஊரடங்கு தளர்த்தபட்ட நிலையில் மீண்டும் கொய்யாப்பழ வியாபாரத்துக்கு சென்றபோது, இவர் விற்பனை செய்த இடத்தில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த பசுபதிபாண்டி (19) என்பவர் பழங்கள் விற்பனை செய்துள்ளார்.
இதுதொடர்பாக முத்துப்பாண்டிக்கும், பசுபதிபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி முத்துப்பாண்டி கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகே அய்யனாரூத்தில் உள்ள கொய்யாப்பழ தோட்டத்துக்கு சென்ற முத்துப்பாண்டி லோடு ஆட்டோ மோதி உயிரிழந்தார். ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் போலீசார் விபத்து என்று விசாரணை நடத்தி வந்த நிலையில், முத்துப்பாண்டியின் உறவினர்கள், முன்விரோதத்தில் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில், கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
லோடு ஆட்டோவை ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்த பசுபதிபாண்டி, அதனை ஓட்டி வந்து முத்துப்பாண்டி மீது மோத விட்டுள்ளார். ஆட்டோ மோதியதும் அவர் உயிருக்கு போராடியுள்ளார். மீண்டும் அவர் மீது ஆட்டோவை ஏற்றி கொலை செய்துள்ளார். பின்னர் ஆட்டோவுடன் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் ஆட்டோ சேதம் அடைந்ததால் அதனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பசுபதிபாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.