செய்திகள்
புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-07-23 15:18 IST   |   Update On 2020-07-23 15:18:00 IST
கரூரில், ரூ.1 கோடியே 40 லட்சத்தில் புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்:

கரூரில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் வடிவமைக்கப்பட்ட புற்றுநோய் கண்டறிவதற்கான நடமாடும் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு சோபிகா இம்பெக்ஸ் நிறுவன இயக்குனர் சிவசாமி தலைமை தாங்கினார். ரோட்டரி முன்னாள் கவர்னர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, நடமாடும் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், கரூர் ரோட்டரி, திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம், ஜப்பான், பிரேசில் நாடுகளில் உள்ள ரோட்டரி சங்கங்கள் இணைந்து இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளன. இந்த நடமாடும் வாகனத்தில், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், அடிவயிறு புற்றுநோய், மற்றும் வாய் புற்றுநோய் இருக்கிறதா? என்று கண்டறிவதற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டு உள்ளன. 

பரிசோதிப்பதற்கு என்று மூன்று தனித்தனி அறைகள், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த புதிய வாகனத்தை உருவாக்குதவற்கு கரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவனம் ரூ.42 லட்சமும், திருச்சி கே.எம்.சி. மருத்துவமனை சார்பில் ரூ.21 லட்சமும் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதில், கரூர் ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News