தமிழ்நாடு
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்தது

Published On 2022-03-08 12:19 IST   |   Update On 2022-03-08 12:19:00 IST
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ஒரு சவரன் ரூ.40,160-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. நேற்று பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.808 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 568-க்கு விற்றது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.408 குறைந்து ரூ.40 ஆயிரத்து 160-க்கு விற்றது. கிராமும் ரூ.51 குறைந்து ரூ.5 ஆயிரத்து 20 ஆக உள்ளது.

தங்கத்தை போல் வெள்ளி விலையும் குறைந்து வெள்ளி கிலோவுக்கு ரூ.1100 சரிந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது. நேற்று வெள்ளி கிலோவுக்கு ரூ.2300 அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியா- உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. மேலும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. பங்குசந்தையிலும் கடும் சரிவு ஏற்பட்டதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது.

இதனால் சில நாட்கள் விலை உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

Similar News