தமிழ்நாடு

தி.மு.க. கோவை மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் மரணம்: முதலமைச்சர் இரங்கல்

Published On 2024-01-25 15:55 IST   |   Update On 2024-01-25 15:55:00 IST
  • கோவை மேற்கு மாவட்ட கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
  • பையா என்ற ஆர்.கிருஷ்ணனின் களப்பணியும், கழகப் பணியும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

சென்னை:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

கோவை மேற்கு மாவட்ட கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கவுண்டம்பாளையம் பகுதியில் அவர் ஆற்றி வந்த மக்கள் தொண்டு மகத்தானது. அவருடைய அயராத சமூகப்பணிகள், அப்பகுதி மக்களால் மட்டுமின்றி கழகத்தவராலும் என்றென்றும் மறக்க இயலாதது.

பையா என்ற கிருஷ்ணனின் திடீர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பையா என்ற ஆர்.கிருஷ்ணனின் களப்பணியும், கழகப் பணியும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News