தமிழ்நாடு

கலெக்டர் அமிர்த ஜோதி

மடிப்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் ஏரியை 842 பேர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்- கலெக்டர் தகவல்

Published On 2022-09-03 15:38 IST   |   Update On 2022-09-03 15:38:00 IST
  • 20 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டவும் மற்றும் வணிக பயன்பாட்டுக்காகவும் எடுத்துள்ளார்கள்.
  • 842 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்டிப்பினை தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அறிக்கை கொடுக்கப்படுகிறது.

சென்னை கோவிலம்பாக்கம் அருகில் உள்ள சுண்ணாம்பு கொளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கொடுத்துள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஏரி 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்தது. இந்த பகுதியின் நீர் ஆதாரமாகவும் சுற்றுப்பகுதியின் விவசாய தேவைக்கு உதவியாகவும் இருந்தது.

இந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு பாதியாக சுருங்கியது. இதுபற்றி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஆய்வு செய்ய கடந்த 2020-ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

இந்த குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வள ஆதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு கடந்த மாதம் இறுதிக்குள் அறிக்கை கொடுக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.

இதையடுத்து கலெக்டர் அமிர்த ஜோதி இந்த ஏரி ஆக்கிரமிப்பை பற்றி கடந்த மாதம் 10-ந் தேதி அறிக்கை கொடுத்துள்ளார்.

20 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டவும் மற்றும் வணிக பயன்பாட்டுக்காகவும் எடுத்துள்ளார்கள். இதுபற்றி நீர் வள ஆதார அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 842 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யாராவது சொந்த இடம் என்று உரிமை கொண்டாட நேர்ந்தால் அது தொடர்பான ஆவணங்களை கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். விரைவில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

Tags:    

Similar News