தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2023-11-18 04:45 GMT   |   Update On 2023-11-18 04:45 GMT
  • எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
  • நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆஷிக் ஆசை வார்த்தைகள் கூறினார்.

திருப்பூர்:

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நான் மற்றும் தங்கை, தம்பி ஆகியோர் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும்போது பனியன் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆஷிக் (வயது 19) என்பவர் என்னிடம் நட்பாக பழகினார். இருவரும் அடி க்கடி போனில் பேசி வந்தோம்.

பள்ளி படிப்பு முடிந்தும் எங்களது நட்பு தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தன்னை காதலிப்பதாக ஆஷிக் கூறினார். முதலில் மறுத்த நான் பின் காதலை ஏற்றுக்கொண்டேன். இந்த நிலையில் எனது தந்தைக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் எனது போனை என்னிடம் இருந்து பறித்து வைத்துக்கொண்டார்.

சிறிது நாட்கள் கழித்து வேறு ஒரு போன் நம்பரை மாற்றி அதை பயன்படுத்தி வந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் என்னிடம் பேச வேண்டாம் என மறுத்து விட்டேன்.

இந்த நிலையில் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் எனது தந்தை மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் எனது பாட்டியுடன் தங்கி இருந்து வருகின்றனர்.

நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். அப்போது திடீரென என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் நேற்று முன்தினமும் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் எனது வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எனது சித்தப்பாவிடம் நான் கூறினேன். என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆஷிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News