தமிழ்நாடு
சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
- இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என அறிவிப்பு.
- தொடர்ந்து கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.