தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,340 பேருக்கு கொரோனா- சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு

Published On 2022-07-16 22:04 IST   |   Update On 2022-07-16 22:04:00 IST
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று அதிகரித்துள்ளது.
  • கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,312-ல் இருந்து 2,340- ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 461- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,599 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

இன்று 34,541 கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 618-ல் இருந்து 607 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 306- பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 149-பேருக்கும், கோவை -165, சேலம் -88, காஞ்சிபுரம், 73, நெல்லை -71 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News