தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை கனிமொழி எம்.பி. மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற காட்சி

வெள்ள பாதிப்பில் சிக்கிய கர்ப்பிணியை நேரில் சென்று மீட்ட கனிமொழி

Published On 2023-12-20 09:00 IST   |   Update On 2023-12-20 09:00:00 IST
  • தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது.
  • கனிமொழி எம்.பி. கர்ப்பிணி பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணி பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது.

அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி எம்.பி.யும், அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News