தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 101.94 அடியாக உயர்ந்தது

Published On 2023-05-05 10:21 IST   |   Update On 2023-05-05 10:21:00 IST
  • கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
  • மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 3980 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,700 கன அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 6,712 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 101.62 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 101.94 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News