தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மோடி
- கொரோனா பாதிப்பு காரணமாக மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடையவேண்டி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். அதன்பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று பரிசோதனைக்கு சென்றார்.
முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலையை குறித்து கண்காணித்து, பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடையவேண்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.