பொங்கல் தொடர் விடுமுறை- சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. ஸ்தம்பித்தது சென்னை..!
- பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும்.
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.
இந்நிலையில், விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.
இதனால், சென்னை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், சிக்னல் கோளாறு காரணமாக இயக்கப்படாததால், சுமார் 1.30 மணி நேரமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.