நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவிப்பு
- 2024 மக்களவை தேர்தலில் 8.22 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது நாம் தமிழர் கட்சி.
- விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்க பரிந்துரை செய்த நிலையில், வேறு சின்னத்தை பரிந்துரை செய்ய கோரிக்கை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.
இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி விவசாயி அல்லது புலி ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த சின்னங்கள் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் அல்லது விலங்குகளை அடையாளம் காட்டுவது போல் இருப்பதால், தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற ஏதவாது ஒரு சின்னத்தை பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.