தமிழ்நாடு

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அறிவிப்பு வரவேற்கத்தக்கது- ராமதாஸ்

Published On 2023-09-05 15:23 IST   |   Update On 2023-09-05 15:23:00 IST
  • மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான சிறந்த கருவி ஆகும்.
  • இட ஒடுக்கீட்டை 80 சதவீதம் ஆக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, நடப்பாண்டில் வரும் அக்டோபர் 15-ம் நாள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு என்பது மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான சிறந்த கருவி ஆகும். இந்தத் தேர்வை வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய, மாநில பாடத் திட்டங்களின் கீழ் 10 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் 11-ம் வகுப்பு பயிலும் நிலையில், அவர்களில் குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தத் தேர்வை எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதியை மாதம் ரூ.5000 வீதம் 5000 மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதேபோல், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது 50 சதவீதம் இட ஒடுக்கீடு வழங்கப்படுகிறது. இதை 80சதவீதம் ஆக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News