நாளை 77-வது சுதந்திர தின கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
- கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் நாளை 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.