தமிழ்நாடு

இதற்கும் வந்துவிட்டது இலவசம்... ரூ.40 ஆயிரம் நகை கடன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல், சமையல் எண்ணெய்

Published On 2023-05-12 16:37 IST   |   Update On 2023-05-12 16:37:00 IST
  • வட்டிக்கடை கடைக்காரர் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்.
  • கும்மிடிப்பூண்டியில் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடனாளி ஆக்குவதற்கும், இலவசம் வந்து விட்டது என்று வேடிக்கையாக பேசிக்கொள்கிறார்கள்.

சென்னை:

வியாபாரத்தை பெருக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி, இவ்வளவு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் இந்த பொருள் இலவசம். தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம். இப்படி வாடிக்கையாளர்களை கவர விதவிதமான அறிவிப்புகளை பார்த்திருப்போம்.

இப்போது வட்டிக்கடை கடைக்காரர் கூட வாடிக்கையாளர்களை கவர இலவசங்களை அறிவித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் தனியார் அடகு கடை ஒன்றியம் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நகை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்.

ரூ.30 ஆயிரம் வரை அடகு வைத்தால் அரை லிட்டர் சமையல் எண்ணையுடன் அரை லிட்டர் பெட்ரோலும் இலவசம், ரூ.40 ஆயிரம் வரை அடகு வைத்தால் கூடுதலாக 5 கிராம் வெள்ளியாம். ரூ.40 ஆயிரத்துக்கு மேல் அடகு வைத்தால் தலா ஒரு லிட்டர் பெட்ரோல், சமையல் எண்ணையுடன் 10 கிராம் வெள்ளி நகையாம்.

கும்மிடிப்பூண்டியில் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடனாளி ஆக்குவதற்கும், இலவசம் வந்து விட்டது என்று வேடிக்கையாக பேசிக்கொள்கிறார்கள்.

Tags:    

Similar News